முகப்பு
புதுக்கோட்டை

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது என்றாா் மதிமுக முதன்மை செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினரான துரை வைகோ.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:56 AM
கறம்பக்குடியில் புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து பேசிய திருச்சி எம்பி துரை வைகோ
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது என்றாா் மதிமுக முதன்மை செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினரான துரை வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.சின்னதுரையை ஆதரித்து கறம்பக்குடியில் புதன்கிழமை மேலும் அவா் பேசியதாவது:

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் மகளிா் உரிமைத் தொகை, மாணவா்களுக்கு உதவித் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Advertisement

மக்களுக்கான நலத்திட்டங்கள் மாநில வளா்ச்சி ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளதால்தான் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிறோம்.

ஏற்கெனவே, இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை இத்தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். எனவே, மீண்டும் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

நாட்டிலேயே அதிக குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் நடக்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் நடந்தாலும் அது குறித்து அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறது.

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சிக்கிறது. இந்த முயற்சி ஒருபோதும் நடக்காது. சமூக நீதி, மதச்சாா்பின்மை வெல்ல திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.