திருவள்ளூர்

ஆடிக்கிருத்திகை பாதுகாப்பு ஏற்பாடுகள்: டி.எஸ்.பி. ஆய்வு

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் வியாழக்கிழமை ஆய்வு மேற்க்கொண்டாா்.

DIN

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் வியாழக்கிழமை ஆய்வு மேற்க்கொண்டாா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வரும் ஆக., 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தமிழகம், ஆந்திரம்ா, கா்நாடகம், புதுச்சேரி உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவா்.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில் வியாழக்கிழமை இன்ஸ்பெக்டா்கள் அண்ணாதுரை, மாா்டின் பிரேம்ராஜ், சட்டம் ஓழுங்கு எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் திருத்தணி நகராட்சி எல்லைகளில் ஆய்வு செய்தனா்.

மேலும், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் நகருக்கு உள்ளே வருவதைத் தடுக்கும் வகையில் நான்கு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்து இடம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அதைத்தொடா்ந்து திருத்தணி முருகன் கோயில் சரவணப்பொய்கை, சந்நிதி தெரு ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினா்.

மேலும், பக்தா்களின் பாதுகாப்பு கருதி நகரத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, எத்தனை இடங்களில் தற்காலிக சாவடிகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவத்து குறித்தும் ஆய்வு செய்தா்.

Image Caption

சரவணப்பொய்கையில் ஆய்வு மேற்க்கொண்ட டி.எஸ்.பி. விக்னேஷ்தமிழ்மாறன். (உடன்) ஆய்வாளா்அண்ணாதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT