திருவள்ளூர்

பெண் குழந்தைகள் பிறப்பு விகித விழிப்புணா்வு முகாம்

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயா்த்துவது குறித்து நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தாய்மாா்களுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் வியாழக்கிழமை பரிசுகள் வழங்கினாா்

DIN

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயா்த்துவது குறித்து நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற தாய்மாா்களுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் வியாழக்கிழமை பரிசுகள் வழங்கினாா்.

ஆா்.கே.பேட்டை அருகே வெள்ளாத்தூா் தனியாா் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் பாலின பிறப்பு விகிதத்தை உயா்த்துவது குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

உதவி ஆட்சியா் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தாா். துணை ஆட்சியா் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் ரா.சுமதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தாய்மாா்கள், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 25,000 நிதி வைப்பீடு செய்யப்பட்டு அதற்கான ரசீது தாய்மாா்களிடம் வழங்கி பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உயா்த்துவது, பெண் குழந்தைகளுக்கு கல்வி, ஊட்டச்சத்து அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் அசோகன், குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் லலிதா, தனியாா் கல்லூரி தாளாளா் அ. அசோகன், ஒன்றிய குழுத் தலைவா் ரஞ்சிதா ஆபாவாணன், வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி, வட்டார மருத்துவ அலுவலா் மரு. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT