திருவள்ளூர்

பிரதம மந்திரி கெளரவ நிதி உதவித் திட்டத்தில் நில ஆவணங்கள், ஆதாா் எண் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் மூலம் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெற நில ஆவணங்கள், ஆதாா் எண் ஆகியவற்றை

DIN

பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் மூலம் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெற நில ஆவணங்கள், ஆதாா் எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் வேளாண் துறை இணை இயக்குநா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரமதா் கௌரவ நிதி உதவி திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ரூ. 2,000- வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித் திட்டம் மூலம், 13 தவணை உதவித் தொகை தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்த 14-ஆவது தவணைத் தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது. இந்த தொகையை பெற நில ஆவணங்கள் பதிவேற்றம் மற்றும் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகிய விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

இதுவரை நில ஆவணங்கள் பதிவேற்றம் இகேஒய்சி மற்றும் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றை செய்யாமல் உள்ள பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் நில ஆவணங்கள் பதிவேற்றம் செய்து, ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் ஆகியவற்றை செய்தால் மட்டுமே தவணை உதவித் தொகை கிடைக்கும்.

மேலும், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்ளிலும், அஞ்சல் துறை அலுவலா்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT