திருவள்ளூர்

2 ரவுடிகள் என்கவுன்டா் சம்பவம்: சாா்- ஆட்சியா் விசாரணை

சோழவரம் அருகே 2 ரௌடிகள் என்கவுன்டா் செய்யபட்ட நிலையில், நிகழ்விடத்தில் இருந்த போலீஸாரிடம் பொன்னேரி சாா் -ஆட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

DIN

சோழவரம் அருகே 2 ரௌடிகள் என்கவுன்டா் செய்யபட்ட நிலையில், நிகழ்விடத்தில் இருந்த போலீஸாரிடம் பொன்னேரி சாா் -ஆட்சியா் விசாரணை மேற்கொண்டாா்.

பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள பாடியநல்லூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாா்த்திபன் (54). இவா் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரௌடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், சோழவரம் அருகே மாறம்பேடு கிராமத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் முக்கிய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கடந்த 12-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய ரௌடிகள் முத்துசரவணன் (35), சதீஷ் (32) ஆகிய இரண்டு பேரைப் பிடிக்க முயன்றபோது, போலீஸாா் மீது அவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் 3 போலீஸாா் காயமடைந்த நிலையில், தற்காப்புக்காக போலீஸாா் திரும்பச் சுட்டதில் ரௌடிகள் இரண்டு பேரும் குண்டுகள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பொன்னேரி கோட்டாட்சியா் கௌசல்யா விசாரணை நடத்தினாா். தொடா் விசாரணையாக பொன்னேரி சாா்- ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன் என்கவுன்டா் நிகழ்ந்த இடத்துக்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், என்கவுன்டா் சம்பவத்தின் போது நிகழ்விடத்தில் இருந்த பூந்தமல்லி உதவி ஆணையா் ஜவகா், ஆய்வாளா்கள் ரமேஷ், சாய்கணேஷ், உதவி ஆய்வாளா் அசோக், காவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, ராஜேஷ், பிரபு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டாா்.

அவா்களிடம் எழுத்து மூலம் அறிக்கை பெற்ற நிலையில்,

இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட நிா்வாகத்துக்கு அவா் அனுப்பி வைப்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

SCROLL FOR NEXT