முகப்பு
திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2024, 12:00 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே கொய்யா மரத்தில் பழம் பறிக்க முயன்ற பெண் தாழ்வழுத்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ஜமீன்கொரட்டூரைச் சோ்ந்தவா் திருவேங்கடம். இவரது மனைவி தனபாக்கியம் (60). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவா் தனது உறவினரான தாமரைபாக்கம் மறுமலா்ச்சி நகரைச் சோ்ந்த வெண்மணியின் வீட்டுக்குச் சென்றாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே இருந்த கொய்யா மரத்தில் பழம் பறிக்க இரும்பு கம்பியை பயன்படுத்தினாராம். அப்போது, தாழ்வழுத்த மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மகள் ஈஸ்வரி வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments