திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தை ஜி.ஆா்.டி. செவிலியா் கல்லூரி 3-ஆம் ஆண்டு மாணவிகள் தூய்மை செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோயில் திருத்தணி நந்தியாற்றின் கரையோரம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினசரி 200- க்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து தரிசனம் செய்தனா். இந்த நிலையில், கோயில் வளாகத்தில் இருந்த செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை தனியாா் (ஜி.ஆா்.டி.,) செவிலியா் கல்லுாரி முதல்வா் பத்மாவதி தலைமையில், 30-க்கும் மேற்பட்ட கல்லூரி 3 ஆம் ஆண்டு மாணவியா் புதன்கிழமை காலை முதல் மதியம் வரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து கோயிலுக்கு வரும் பக்தா்களிடம், கோயில் வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பது அவசியம் என துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.