முகப்பு
திருவள்ளூர்

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருத்தணி அருகே லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Updated On : 11 ஜூலை, 2024 at 7:01 PM
ஜெகன்).
பகிர்:

திருத்தணி பைபாஸ் சாலை ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

திருத்தணி ஆசிரியா் நகா் கிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் ஜோதி மகன் ஜெகன்(19). இவா் சென்னை வண்டலுாா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்லுாரியில், பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். வியாழக்கிழமை ஜெகன், தனது இரு சக்கர வாகனத்தில், பைபாஸ் ரவுண்டானாவில் இருந்து சித்தூா் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ரயில்வே பாலத்தில் செல்லும் போது, பின்னால் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற சிமென்ட் லாரி மோதியதில், ஜெகன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →