வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் சமீபகாலமாக அவ்வப்போது பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது நிலையின் 1-ஆவது அலகில் ஏற்கெனவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, இரண்டாவது அலகிலுள்ள கொதிகலனில் புதன்கிழமை கசிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இதிலும் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மின்வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள் கசிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.