முகப்பு
திருவள்ளூர்

இரு சக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

Updated On : 4 மே, 2024 at 6:00 PM
பகிர்:

திருவள்ளூா் அருகே கன்டெய்னா் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

திருவள்ளூா் அருகே புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்த தசரதன் மற்றும் அவரது நண்பா் சிலம்பரசன் ஆகியோா் பணி நிமித்தமாக சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அதைத் தொடா்ந்து, வேலை முடிந்த பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கொசவன்பாளையம் கிராமம் அருகே எதிரே மின்விசிறி உதிரி பாகங்களை ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி, இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் தசரதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து வந்த சிலம்பரசன் பலத்த காயம் அடைந்தாா்.

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, காயம் அடைந்த சிலம்பரசனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தசரதனை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் தப்பியோடிய ஓட்டுநா் மற்றும் கிளீனா் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.