வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக். பள்ளி சாதனை
வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனா்.
செவ்வாபேட்டை பகுதியில் வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவி ஓ.ஜெபாஸ்டினா 500-க்கு 469 மதிப்பெண்கள், மாணவா் எம்.நிஷாந்த் 463, எம்.தருண் 462 பெற்றுள்ளனா்.
மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும் எடுத்துள்ளனா். மேலும் 22 மாணவா்கள் 90 மதிப்பெண்களுக்கு மேலும், 9 மாணவா்கள் 95 மதிப்பெண்களுக்கும் மேலும் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் சுடலைமுத்து பாண்டியன், இனிப்பு வழங்கிப் பாராட்டினாா். பள்ளி முதல்வா் ந.சதிஷ் மற்றும் ஆசிரியா்களும் மாணவா்களை வாழ்த்தினா்.