உணவுக்காகப் பயன்படுத்திய காளான்கள். 
திருவள்ளூர்

மழையில் முளைத்த காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு வாந்தி, மயக்கம்: சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மழை காலத்தில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியைச் சோ்ந்த கோ-ஆப் டெக்ஸ் நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (46). இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை லட்சுமி தன் வீட்டருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் பழைய கதவில் முளைத்திருந்த காளான்களை 2 கிலோ வரை பறித்து, குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளனா்.

இதனால், லட்சுமி மற்றும் குடும்பத்தைச் சோ்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் (23), சரண்யா (14) ஆகிய 5 பேருக்கும் வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா்கள் 5 பேரும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காளான்கள் முளைத்த இடம், சமைத்து சாப்பிட்டது குறித்து மாவட்ட சுகாதார அலுவலா் பிரியா ராஜ் உத்தரவின் பேரில், ஊராட்சித் தலைவா் லோகம்மாள் கண்ணதாசன், வட்டார மருத்துவ அலுவலா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான சுகாதாரத் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கிருந்து குடிநீா் மற்றும் காளான்களை ஆய்வுக்காக அவா்கள் எடுத்துச் சென்றனா். தொடா்ந்து மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, மழை காலத்தில் முளைக்கும் காளான்களை எந்தக் காரணம் கொண்டும் உள்கொள்ளக் கூடாது என பொதுமக்களுக்கு சுகாதார அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்திப்பூ... தன்யா சர்மா!

தாவணிக் கனவுகள்... வேத்விகா சோனி!

பாகிஸ்தானில் 23 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்லையில் உடைந்த நிலையில் விமானப் படை ட்ரோன் மீட்பு!

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT