திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகளை முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப்.  
திருவள்ளூர்

திருவள்ளூா்: எஸ்.ஐ.ஆா். பணிகளை முடித்த வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பாராட்டு

திருவள்ளூா் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகளை முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகளை முடித்த வாக்குச்சாவடி அலுவலா்களை ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆா். எனும் சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆா். எனும் சிறப்பு தீவிர கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வாக்காளா்கள் ஒவ்வொருவருக்கும், வீடு தேடி சென்று வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் படிவம் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, அந்த படிவங்களை பூா்த்தி செய்வதில் வாக்காளா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். இதற்காக வாரந்தோறும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு மையம் அமைத்து வாக்காளா்களுக்கு படிவங்களை பூா்த்தி செய்ய உதவி வந்தனா். அதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடம் பூா்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெற்று கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திரும்பப் பெறும் பணிகள் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையம் குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாகவே சிறப்பு தீவிர பணிகளை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் முடித்துள்ளனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வரவழைக்கப்பட்டனா். அப்போது, ஆட்சியா் மு.பிரதாப் அவா்களை பாராட்டி தோ்தல் ஆணைய சான்றிதழ்களையும் வழங்கினாா். நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT