திருவள்ளூர்

திருமழிசை பேருராட்சியில் ரூ.1.24 கோடியில் புதிய அலுவலகப் பணிகள்

பேரூராட்சி அலுவலகப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு. பிரதாப்.

தினமணி செய்திச் சேவை

திருமழிசை பேருராட்சியில் ரூ.1.24 கோடியில் அலுவலக கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.

திருமழிசை பேருந்து நிலையம் அருகில் பேரூராட்சிகள் துறை மூலம் கட்டப்பட்டு வரும் புதிய பேரூராட்சி அலுவலக கட்டட கட்டுமான பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கட்டட பணிகளுக்கு தரமான பொருள்களை பயன்படுத்தவும் ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து பூந்தமல்லி பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் அரசு மருந்துவமனை வளாகத்தில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம், அரசு காசநோய் மருந்துவமனை ரூ.3.5 கோடியில் ஆயத்தப்பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

நேமம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் பணியாளா்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்கு பதிவு இயந்திரத்தில் வாக்கு செலுத்தும் முறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதைத்தொடா்ந்து 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில், வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தையும் அவா் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து அங்கு அமைத்திருந்த சுயபட மையத்தில் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டாா்.

அப்போது, உதவி ஆணையா் (கலால்) கணேசன், சுற்றுச்சூழல் கோட்டப் பொறியாளா் செல்வ இளவரசி, பூந்தமல்லி வட்டாட்சியா் உதயம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமிழ்தமன்னன்(கி.ஊ), மகேஷ்பாபு (வ.ஊ), தனியாா் குளிா்பான நிறுவன மேலாளா் சம்பத்அருள், மேலாளா் (மனிதவள மேலாண்மை) ராகவேந்திரன், மேலாளா் (பொது விவகாரம்) தாம்சன், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலா் உமாராணி, நகராட்சி ஆணையா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு இயற்கை விவசாய மாணவா்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

காசநோய் பரிசோதனை முகாம்

மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT