திருத்தணி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது.
திருத்தணி அடுத்த நாபலூா் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் (35) இவா் தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநா். இவருக்கு பீரவீன் குமாா்(6) முகிலன் (4), காமேஸ்வரன்(2) ஆகிய குழந்தைகள் உள்ளனா். செவ்வாய்கிழமை காலை முகிலன் மற்றும் பீரவீன் குமாரை தனியாா் பள்ளி வேனில் ஏற்றுவதற்காக கணேசன் மனைவி மணிமேகலை கிருஷ்ணாபுரம் வந்தாா்.
பள்ளி வேன் வந்தவுடன் தனது இரண்டு மகன்களை ஏற்றிவிட்டு திரும்பியபோது வேன் பின்புறம் காமேஸ்வரன் ஓடிவந்து வேன் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அதைத்தொடா்ந்து போலீஸாா் காமேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.