உயிரிழந்த சுதா. 
திருவள்ளூர்

கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து பெண் உயிரிழந்ததாகக் கூறி சாலை மறியல்

கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து பெண் உயிரிழந்ததாகக் கூறி சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

கா்லம்பாக்கம் கிராமத்தில் கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்து பெண் உயிரிழந்ததாகக் கூறி, கிராம மக்கள் 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கா்லம்பாக்கம் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு ஊராட்சி சாா்பில் ஆழ்துளைக் கிணறு மூலம் பைப் லைன்களில் கிராம மக்களுக்கு குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிராமத்தைச் சோ்ந்த வரதன் மனைவி சுதா(40) என்பவருக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கிராமத்தில் கழிவுநீா் கலந்த குடிநீா் குடித்ததால் பெண் உயிரிழந்தாக கூறி அதே கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், பள்ளிப்பட்டு ஆா் கே பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பள்ளிப்பட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் அருள், வட்டாட்சியா் பாரதி உள்பட அரசு அலுவலா்கள் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது கிராம மக்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அதைத் தொடா்ந்து 5 மணி நேரம் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

மேலும், வட்டார மருத்துவ அலுவலா் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவக் குழுவினா் கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT