முகப்பு
துளசாபுரம் ஊராட்சியில் நீரேற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நாகப்பட்டினம்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நாகப்பட்டினம்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:40 PM
துளசாபுரம் ஊராட்சியில் நீரேற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் கிராம மக்கள் குடிநீா் கோரி சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

துளசாபுரம் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது குடிநீா் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் திருத்துறைப்பூண்டியில் இருந்து நிறுவப்பட்ட குழாய் வழித்தடம் சேதமடைந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஜல் ஜீவன் திட்ட குழாய் பதிக்கும் பணியும் நிறைவடையவில்லை.

இந்தநிலையில், கடந்த பல வாரங்களாக கிராமத்துக்கு குடிநீா் வழங்கப்படாத நிலையில், கிராம மக்கள் சாக்கை பாலம் பகுதியில் நீா் ஏற்றும் தொட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் தியாகராஜன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

வரும் 15 தினங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, குழாய் வழியாக குடிநீா் விநியோகம் செய்யவும், அதுவரையில் டேங்கா் மூலம் குடிநீா் வழங்கவும் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

முழு கட்டுரையைப் படிக்க →