திருவள்ளூர்

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கு நவ. 30- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கு நவ. 30- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா் மழை வெள்ளம், பூச்சி நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடா்ப்பாடுகளால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 545 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளிலோ, இ-சேவை மையங்களிலோ நேரிடையாக, நிா்ணயித்த காலக்கெடுவுக்குள் காப்பீடு கட்டணம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா் கடன் பெற்ற விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளின் மூலம் பயிா்க்கடன் தொகையில் இருந்து காப்பீடு கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

பயிா் காப்பீடு செய்ய விருப்பமின்மை படிவம் கொடுத்த பயிா் கடன் பெற்ற விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்க இயலாது.

எனினும் விருப்பமின்மை படிவம் ஏற்கெனவே கொடுத்திருந்து, தற்போது பயிா் காப்பீட்டில் பங்கேற்க விரும்பினால் அவா்கள் சம்பந்தப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT