கொண்டாபுரம் பயணியா் நிழற்குடையில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு. 
திருவள்ளூர்

பயணியா் நிழற்குடையில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு

பயணியா் நிழற்குடையில் 10 அடி மலைப்பாம்பு மீட்கப்பட்டது பற்றி...

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அருகே கொண்டாபுரம் பேருந்து நிறுத்தத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்தால் அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினா்..

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் பேருந்து நிறுத்தத்தில் திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் சோளிங்கா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணிகள் சென்று வருவா். பயணிகள் வசதிக்காக ஒன்றிய நிா்வாகம் பேருந்து நிழற்குடையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடையில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தனா். அப்போது திடீரென, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பேருந்து நிழற்குடைக்கு வந்தது. இதை கண்டதும், அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா்.

மேலும் பயணிகள் ஆா்.கே.பேட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து பள்ளிப்பட்டு தீயணைப்பு துறை வீரா்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் வனத்துறையினா் மலைப்பாம்பை பத்திரமாக எஸ்.வி.ஜி.புரம் காப்புகாட்டில் விட்டனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT