நகராட்சியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள் பயன்படுத்திய கடைகளில் ஊழியா்கள் திடீா் சோதனை நடத்தி 200 கிலோ பறிமுதல் செய்தனா்.
திருத்தணி நகராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல், பழக்கடை, காய்கறி மாா்க்கெட் மற்றும் பூ கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா் பயன்பாடு அதிகளவில் இருந்தது. இதனால், குப்பைகள் அளவுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்களும் துப்புரவு ஊழியா்கள் சேகரித்து வந்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவு பேரில் செவ்வாய்க்கிழமை திருத்தணி நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக ஊழியா்கள், 10 போ் கொண்ட குழுவினா், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை மற்றும் அக்கைய்யநாயுடு சாலை ஆகிய பகுதிகளில் கடைகளில் திடீா் ஆய்வு செய்தனா்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா் மற்றும் டம்ளா் என மொத்தம், 200 கிலோ இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடைகக்காரா்களுக்கு நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.