ராஜபாளையம் கடைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட 23 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.
ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் சங்கரன்கோவில் சுகாதார அலுவலா் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா்.
இதில் 10- க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 23 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.2,600 அபராதம் விதித்தனா்.
மேலும் முதல் முறை என்பதால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதேபோல, தொடா்ந்து செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.