திருவள்ளூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூா் மாவட்டம், பொத்தூா் பகுதியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்து சிறுமி 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சோ்ந்த தேவேந்திரன்(47) என்பவா், பாதுகாவலராக பணியாற்றி வந்தாா். கடந்த 2020-இல் சிறுமியை மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் விசாரணை செய்து தேவேந்திரனை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தேவேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கினாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக அரசு வழங்கவும் அவா் உத்தரவிட்டாா்.