தா.மோதிலால் 
திருவள்ளூர்

பூண்டி மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் நியமனம்

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டம், பூண்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக தா.மோதிலாலை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், நெய்வேலி கிராமத்தைச் சோ்ந்தவா் தா.மோதிலால். இவா் தற்போது இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் பூண்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கிடையே தன்னை ஒன்றிய பொறுப்பாளராக பரிந்துரை செய்த அமைச்சா் சா.மு.நாசா், மேற்கு மாவட்ட செயலாளா் சந்திரன், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, வாழ்த்தும் பெற்றாா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT