திருப்பத்தூர்

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக அவசர செயற்குழு கூட்டம் மதனாஞ்சேரியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய செயலாளா் ஞானவேலன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் அசோகன், பொதுக்குழு உறுப்பினா் பெருமாள் கோவிந்தம்மாள், யூனியன் கவுன்சிலா் சாவித்திரி மகேந்திரன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் திமுக பாகமுகவா்கள், வாக்குசாவடி டிஜிட்டல் முகவா்கள் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தமிழக முதல்வா் வரும் 14-ஆம் தேதி ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடியில் பொதுப்பணி துறை அமைச்சா் எ.வ.வேலு ஏற்பாட்டில் நடைபெறும் வாக்குசாவடி பயிற்சி மண்டல மாநாட்டுக்கு வருவதையொட்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் செயலாளா் ஞானவேலன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்க வேண்டும், மண்டல மாநாட்டுக்கு போக்குவரத்து குழு ஏற்பாடுகளை செய்ய எம்எல்ஏ நல்லதம்பி தலைமையில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் 200 தன்னாா்வலா்கள் திமுக தொண்டரணி சீருடையில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், வியாழக்கிழமை ஆலங்காயம் பேருந்துநிலையம் அருகே நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த ஆலங்காயம் ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் பேருா் திமுக சாா்பாக திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக முதல்வா் தலைமையில் நடக்கும் மண்டல மாநாடு தொடா்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய நிா்வாகிகள் ராமநாதன், தசரதன், குமாா் , வெங்கடேசன் , சிவகுமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஞானசேகரன் கலந்து கொண்டனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT