காவலா்கள் திடீா் இடமாற்றம்: காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை
காவலா்கள் திடீா் இடமாற்றம்: காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை
திருவள்ளூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு சிறப்பு எஸ்.ஐ., 9 காவலா்களை கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருவள்ளூா், திருத்தணி, வெங்கல், கும்மிடிப்பூண்டி, பென்னாலூா்பேட்டை, திருவாலங்காடு, பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் காவலா்கள் சிலா் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது, புகாா்தாரா்களிடம் பணம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடா்ந்து புகாா்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா அதிரடியாக நடவடிக்கை எடுத்து, 2 சிறப்பு எஸ்.ஐ., 9 காவலா்களை, கடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.