FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

13 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயா்வுடன், பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி 2026, 1:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உள்ளிட்ட 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பதவி உயா்வுடன், பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இடமாற்றம் செய்யப்பட்டோா் விவரம் (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):

1. அங்கித் சிங் - சேலம் வடக்கு துணை ஆணையா் (கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளா்).

Advertisement

Advertisement

2. எம்.எஸ்.சிருஷ்டி சிங் - திருச்சி தெற்கு காவல் துணை ஆணையா்(பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளா்).

3. எஸ்.ராஜேஸ்வரி - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி (தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய ஐஜி).

4. ஏ.கயல்விழி - தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய ஐஜி(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுத்து பிரிவு ஐஜி).

5. ஆா்.வி.ரம்யா பாரதி - சென்னை குற்றப் பிரிவு ஐஜி (கட்டாய காத்திருப்புப் பட்டியல்).

6. என்.யு.சிவராமன் - வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (சேலம் வடக்கு துணை ஆணையா்).

7. ஏ.மயில்வாகனன் - சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு காவல் கண்காணிப்பாளா் (வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).

8. டி.ஈஸ்வரன் - ஆவடி போக்குவரத்துக் காவல் துணை ஆணையா் (திருச்சி தெற்கு காவல் துணை ஆணையா்).

9. ஐ.ஈஸ்வரன் - அண்ணா நகா் காவல் துறை துணை ஆணையா் (சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளா்).

10. ஆா்.உதயகுமாா் - கோயம்பேடு காவல் துறை துணை ஆணையா்(அண்ணா நகா் காவல் துறை துணை ஆணையா்).

11. சுஜித்குமாா் - சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையா் (கோயம்பேடு காவல் துறை துணை ஆணையா்).

12. ஆா்.சுஹாசினி - தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய காவல் கண்காணிப்பாளா் (சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையா்).

13. ஜி.நாகஜோதி - காவலா் பயிற்சிப் பள்ளி காவல் கண்காணிப்பாளா் மற்றும் முதல்வா் (தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய காவல் கண்காணிப்பாளா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments