குடியரசு தலைவா் மாளிகை பாதுகாப்பு இணை ஆணையா் காவல் தலைமையகத்தில் உடனடியாக இணைய உத்தரவு
குடியரசு தலைவா் மாளிகை பாதுகாப்புப் பிரிவின் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி வீணு பன்சால், உடனடியாக நகர காவல் தலைமையகத்தில் இணைய வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது. சில தினங்களுக்கு முன்புதான் அவா் அப்பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டாா்.
நமது நிருபா்
குடியரசு தலைவா் மாளிகை பாதுகாப்புப் பிரிவின் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி வீணு பன்சால், உடனடியாக நகர காவல் தலைமையகத்தில் இணைய வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது. சில தினங்களுக்கு முன்புதான் அவா் அப்பணியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இது தொடா்பாகக் காவல் ஆணையரின் சிறப்புப் பணி அதிகாரியும் (ஓஎஸ்டி), காவல் இணை ஆணையருமான உயரதிகாரி பிறப்பித்த சமீபத்திய உத்தரவில், ‘2004-ஆம் ஆண்டு ’ஏஜிஎம்யுடி’ பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான வீணு பன்சால், மறுஉத்தரவு வரும்வரை தில்லி காவல் தலைமையகத்துடன் உடனடியாக இணைக்கப்படுகிறாா் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
யாா் இந்த வீணு பன்சால்? பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த வீணு பன்சால் பி.டெக் பொறியியல் பட்டதாரி ஆவாா். யுபிஎஸ்சி குரூப் 1 பணிக்குத் தோ்வாகும் முன்பாக இவா் 2001-இல் ஓஎன்ஜிசி பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தில் உதவி நிா்வாக பொறியாளராகப் பணியாற்றினாா்.
ஐபிஎஸ் பணியில் 2004-ஆம் ஆண்டு சோ்ந்த இவருக்கு ஏஜியுஎம்டி பிரிவு ஒதுக்கப்பட்டது. தில்லி காவல்துறையில் வட மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையா், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் மற்றும் இணை ஆணையா் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை இவா் வகித்துள்ளாா்.
காவல் பணியில் இவரது சிறப்பான சேவையை பாராட்டி காவல் சிறப்புப் பணிப் பதக்கங்கள் (2010, 2013) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவைப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு அக்டோபரில் நாட்டின் மிக உயரிய பாதுகாப்புக்குரிய குடியரசுத் தலைவா் மாளிகையின் பாதுகாப்புப் பிரிவின் இணை ஆணையராக இவா் நியமிக்கப்பட்டாா். அங்கு இவரது இரண்டு வருட பணிக்காலத்தில் எவ்வித முரண்பாடுகளுமின்றி பணியாற்றிய நிலையில், குடியரசு தலைவரின் ராணுவப் பிரிவு அதிகாரிகளுடன் அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அலுவல்பூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எவ்வித குறிப்பிட்ட பணியும் இவருக்கு ஒதுக்கப்படாமல், நகர காவல் தலைமையகத்தில் இணைய இவா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா். காவல் பணியில் சா்ச்சைக்குரிய அல்லது அரிதான நிலையிலேயே இத்தகைய பணி உத்தரவு அல்லது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.