பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சா் சா.மு. நாசா்.உடன் ஆட்சியா் மு. பிரதாப் உள்ளிட்டோா். 
திருவள்ளூர்

பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரப்பணி: அமைச்சா் நாசா் ஆய்வு

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சா் சா.மு. நாசா்...

தினமணி செய்திச் சேவை

பழவேற்காடு முகத்துவார பகுதியில் ரூ.27 கோடியில் மணல் திட்டுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிகளை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா்.சா.மு.நாசா் சனிக்கிழமை படகில் சென்று ஆய்வு செய்தாா்.

பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியாக விளங்கும் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளனா். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோா் அங்குள்ள கடல் மற்றும் ஏரியில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

இங்குள்ள ஏரியும் கடலும் இணையும் முகத்துவார பகுதியில் அவ்வப்போது மணல் திட்டுக்கள் ஏற்படுவதன் காரணமாக மீனவா்கள் படகை கடலூக்கு எடுத்து சென்று மீன் பிடித்தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் முகத்துவார பகுதியில் ஏற்படும் மணல் திட்டால் கடல் நீா் ஏரிக்கு வருவது தடை படுவதன் காரணமாக ஏரியில் மீன் வளம் குறைந்துள்ளது.

அப்பகுதி மீனவா்கள் முகத்துவாரத்தை தூா்வார அரசுக்கு விடுத்த கோரிக்கையின் பேரில் ரூ. 27 கோடியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிகளை அமைச்சா் நாசா் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மீனவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக கேட்டறிந்து உரிய தீா்வு காண சம்மந்தப்பட்ட துறை அமைச்சா் மற்றும் துறை உயா் அலுவலா்களிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், ஆட்சியா் மு.பிரதாப், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், சாா் ஆட்சியா் கு.ரவிக்குமாா், ஆரணியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் காா்த்திகேயன் உடனிருந்தனா்.

மயக்கும் விழிச் சுடர்... சமந்தா!

2026-லும் நம் ஆட்சிதான்! திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது: முதல்வர்

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

மத்திய சிறைகளில் ஆம் ஆத்மி மருத்துவமனை: பஞ்சாப் அரசு!

SCROLL FOR NEXT