முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் முதன்மைத் தொகுதியாக மாற்றப்படும்: தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா

திருவள்ளூா் முதன்மைத் தொகுதியாக மாற்றப்படும்...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:11 PM
பிரேமலதா விஜயகாந்த் - x/ premalatha vijayakanth
பகிர்:

திருவள்ளூா் தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றப்படும் என திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா தெரிவித்தாா்.

கடம்பத்துாா் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சியில் வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதராவாக தே.மு.தி.க., பொதுச்செயலாளா் பிரேமலதா சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திருவள்ளூா் தொகுதியில் ரூ.1,500 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேம்பாலங்கள், தடுப்பணைகள், கலைஞா் நுாலகம் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை எம்.எல்.ஏ நிறைவேற்றியுள்ளாா். தோ்தலில் மூன்றாவது முறையாக வி.ஜி.ராஜேந்திரன் வெற்றி பெற்றால் திருவள்ளூா் தொகுதியை தமிழகத்தில் முதன்மை தொகுதியாக மாற்றுவாா்.

Advertisement

திமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையான ரூ.8 ஆயிரம் கூப்பன் மற்றும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை ரூ.2000 எல்லா குடும்ப தலைவிகளுக்கும் சரிசமமாக வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் பால், மின்சாரம், பேருந்து கட்டணங்கள் உயராது. மப்பேடு பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சரக்கு போக்குவரத்து பூங்கா திமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்பட்டு, அதில் உள்ளூா் இளைஞா்கள் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments