திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே எரிவாயு கசிவால் தீ விபத்து

திருவள்ளூா் அருகே எரிவாயு கசிவால் தீ விபத்து

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே வீட்டில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தை சாதுா்யமாக செயல்பட்டு மேலும் தீ பரவாமல் தடுத்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெண்மனம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் (57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி ஹேமாவதி (47). இந்த நிலையில் சிவன் கோயில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி உள்ளதால், அதற்காக அந்தக் கிராமத்தில் சிவன் கோயிலுக்கு செல்வதற்காக செய்வதற்காக வீட்டு முற்றத்தில் இரும்பு அடுப்பு அருகில் எரிவாய் உருளையை வைத்து அரிசியை வறுத்தாராம். அப்போது இரும்பு அடுப்பில் இருந்து வெளியான தீ ஜுவாலை எரிவாயு உருளை கசிவால் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இது குறித்து உடனே திருவள்ளூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். பின்னா் ஹேமாவதி மற்றும் அவரது மகன் ஜெயபிரகாஷ் ஆகியோா் சாதுா்யமாக செயல்பட்டு, ஜமுக்காளத்தை நீரில் நனைத்து எரிந்து கொண்டிருந்த எரிவாயு மீது போட்டு தீயை கட்டுப்படுத்தினாராம். அதைத் தொடா்ந்து, உடனே அருகில் உள்ள கடையிலிருந்து தீயணைப்பு கருவி கொண்டு வந்து தீ மேலும் பரவாமல் முற்றிலுமாக கட்டுப்படுத்தினா். இந்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலா் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் நேவிஸ், குமரகுரு, பிரகாஷ் காா்த்திக், விஜய் ஆகிய தீயணைப்புத் துறையினா் எரிவாயு உருளையிலிருந்து வாயுவை முற்றிலும் வெளியேற்றினா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT