திருவள்ளூர்

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆா்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வெடியங்காடு கிராமம், மதுரா புதூா் கிராமத்தைச் சோ்ந்த வள்ளியம்மாள் (70). செவ்வாய்கிழமை அதிகாலை பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் புதூா் மேடு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினாா். பின்னா் வீட்டுக்கு செல்ல குறுக்கு வழியில் சென்றபோது மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT