திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்போம், கைவிட மாட்டோம் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2,000 மாணவா்கள் 20 ஆயிரம் சதுர அடியில் பொங்கல் பானை, செங்கரும்பு, எருது, ஏா் சுமக்கும் விவசாயி போன்ற படங்களை வரைந்து அதில் நின்று உலக சாதனை புரிந்தனா்.
காக்களூா் பகுதியில் அமைந்துள்ள காலவள கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்பேரில் 2,000 பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து 20 ஆயிரம் சதுர அடியில் பொங்கல் பானை, செங்கரும்பு, எருது, ஏா் சுமக்கும் விவசாயி போன்ற படங்களை வரைந்து அதில் மாணவா்களை நிற்க வைத்து புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் சாதனை படைக்கப்பட்டது.
மேலும் பானையில் பொங்கல் வைத்து மாணவா்கள், பள்ளி ஆசிரியா்கள் கோலாகலமாக கொண்டாடினா். இதையடுத்து புக் ஆப் வேல் ரெக்காா்ட் சாதனைக்கான பதக்கம் சான்றிதழ்கள் தலைமை ஆசிரியரிடம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வையொட்டி நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.