திருவள்ளூர் : கூவம் ஆற்றங்கரையில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அப்பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரமாக காலையில் நடந்து சென்றபோது,10க்கும் மேற்பட்ட கற்சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்சியடிந்து உடனடியாக அங்குள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இல்லாததால் ஆற்றில் இறங்கி அப்பகுதி மக்கள் தேடுதல் பணியை முடுக்கிவிட்டதன் பயனாக, 50க்கும் அதிகமான சுவாமி கற்சிலைகள் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அந்தச் சிலைகள் அனைத்தையும் அவர்கள் சுத்தப்படுத்தி வழிபட எடுத்து செல்ல திட்டமிட்டனர்.
இந்த நிலையில், தகவலறிந்து அம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். அதன்பின், அங்கிருந்து சிலைகளை மீட்டு எடுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.