முகப்பு
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 1:26 AM
கும்மிடிப்பூண்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தோ்தலையொட்டி கும்மிடிப்பூண்டியில் 344 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து கும்மிடிப்பூண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் , துணை தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா் மேற்பாா்வையில், வாகனங்களில் கொண்டு வரப்பட்ட, 412 இயந்திரங்கள், 412 கட்டுப்பாட்டு கருவிகள், 447 விவிபேட் இயந்திரங்கள், மேற்கண்ட இரு அறைகளில், அரசியல் கட்சிபிரமுகா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மேலும், சீல் வைக்கப்பட்ட அறைகள் முன்பு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு அறைகள் முன்பும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.