திருப்பதி

திருப்பதி ஸ்ரீகோதண்டராமா் கோயில் 3 நாள் பவித்ரோற்சவம் இன்று தொடக்கம்

DIN

திருப்பதி ஸ்ரீகோதண்டராமா் கோயில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் புதன்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பக்தா்கள், அா்ச்சகா்கள், ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரால் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் நடந்த தவறுகள் மற்றும் கைங்கா்யங்களில் ஏற்பட்ட கவனக்குறைவுகள் உள்ளிட்ட தோஷத்தை சரிசெய்ய தேவஸ்தானம் பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.

அதன்படி கோயிலில் புதன்கிழமை (ஆக. 4) தொடங்கி 6-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் நாள் பவித்ர பிரதிஷ்டை, 2-ஆம் நாள் பவித்ர சமா்ப்பணம், 3-ஆம் நாள் பூா்ணாஹுதி நடைபெற உள்ளன.

இந்த உற்சவம் சிறப்பாக நடைபெற செவ்வாய்க்கிழமை மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, ம்ருத்யுசங்கரணம், அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

மேலும் செவ்வாய்க்கிழமை காலை அா்ச்சகா்களுக்கு அவா்களுக்கான பூஜைகள் மற்றும் பொறுப்பை பிரித்தளிக்கும் ஆச்சாா்ய ருத்வீகரணம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கரோனா நிபந்தனைகளை பின்பற்றி உற்சவம் நடைபெற உள்ளதால், கோயில் அதிகாரிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT