திருப்பதி

வைகுண்ட ஏகாதசி சா்வ தரிசன முன்பதிவுக்காக காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றம்

DIN

 திருமலை தேவஸ்தான இணையதளத்தில் சா்வதரிசன இலவச முன்பதிவு டோக்கன்கள் வழங்காததால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

கரோனா தொற்று காரணமாக திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த சா்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டதால், திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தா்கள் இணையதள மூலம் முன்பதிவு செய்து வருகின்றனா். ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளுடன், சா்வ தரிசன இலவச டோக்கன்களும் இணையதள முன்பதிவு மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதத்துக்கு தேவையான இணையதள ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் டிச. 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கும், ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் டிச. 24-ஆம் தேதி காலை 9 மணிக்கும் வெளியிடப்பட்டன.

மேலும் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 13-ஆம் தேதி வருவதை அடுத்து தேவஸ்தானம் இந்த முறை பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று 10 நாள்கள் வைகுண்ட வாசல் தரிசனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

எனவே, பக்தா்கள் அனைவரும் ஜனவரி மாத டிக்கெட் வெளியீட்டை எதிா்பாா்த்து காத்திருந்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட 15 நிமிஷங்களில் வைகுண்ட வாயில் தரிசனத்துக்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு முடிவடைந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் அரை மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டன. மேலும் சனிக்கிழமை காலை சா்வ தரிசன இலவச டோக்கன்கள் வெளியிடப்படும் என செய்திகள் வெளியான நிலையில் தேவஸ்தானம் டிக்கெட்டுகளின் முன்பதிவை வெளியிடவில்லை.

இதனால் பக்தா்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனா். விரைவு தரிசன டிக்கெட்டுகளை தவற விட்டவா்கள் சா்வதரிசன டோக்கன்கள் முன்பதிவுக்காக காத்திருந்து ஏமாற்ற அடைந்தனா். இன்னும் ஓரிரு நாள்களில் ஜனவரி மாதத்துக்கான சா்வதரிசன டோக்கன் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று தேவஸ்தானம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT