முகப்பு
திருப்பதி

திருப்பதி: விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜன. மற்றும் பிப். மாதங்களுக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜன. மற்றும் பிப். மாதங்களுக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று (டிச.28ம் தேதி, செவ்வாய் ) மாலை 3 மணிக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு தொடர்புடைய ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக்தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இதில் ஜன.1ம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று 1000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும்(ரூ10000 நன்கொடை+ரூ500 பிரேக் தரிசன டிக்கெட்) தேவஸ்தான இணையதள முன்பதிவில் வைக்கப்பட உள்ளது. ஜன.13ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று 1000 மகாலகு தரிசனம்(ரூ10000+ரூ300) டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. 

ஜன.14ம் தேதி முதல் ஜன.22ம் தேதி வரை 9 நாட்களுக்கு தினசரி 2 ஆயிரம் டிக்கெட்டுகள் லகு தரிசனம்(ரூ10000+ரூ500) டிக்கெட்டுகளும் வெளியிடப்பட உள்ளது. மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேலே உள்ள நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 200 டிக்கெட்டுகளும், சனி மற்றும் ஞாயிறுகளில் 300 டிக்கெட்டுகளும்(ரூ10000+ரூ500) டிக்கெட்டுகளும் இவற்றுடன் முன்பதிவில் வைக்கப்பட உள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட சர்வதரிசன இணையதள முன்பதிவு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டது. தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள், வைகுண்ட ஏகாதசி வாயில் திறப்பு நாட்களில் தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என வெளியிடப்பட்ட நிலையில் அவற்றை முன்பதிவு செய்ய ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் பலரால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் 15 நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் பலர் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →