திருப்பதி

திருமலையில் 36,000 பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 36,126 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 14,612 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கமாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வரவேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT