திருப்பதி

திருமலையில் அனந்த பத்மநாப ஸ்வாமி விரதம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி திதி அன்று அனந்த பத்மநாபசுவாமி விரதம் கடைபிடிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு ஏழுமலையானுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதன்பின்பு அா்ச்சகா்கள், அதிகாரிகள் ஏழுமலையான் கோயிலிலிருந்து சக்கரத்தாழ்வாரை மரப் பல்லக்கில் ஊா்வலமாக திருக்குளத்துக்கு கொண்டு சென்று அங்கு திருமஞ்சனம் நடத்தி குளத்தில் காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தீா்த்தவாரியை நடத்தினா். அப்போது அதிகாரிகள், அா்ச்சகா்கள் புனித நீராடினா்.

108 வைணவ திவ்யதேசங்களில் திருமலை மிக முக்கியமானதாகக் கருதப்படுவதால், தேவஸ்தானம் இங்கு அனந்தபத்மநாபசுவாமி விரதத்தை ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT