திருப்பதி

திருமலையில் பாலகாண்ட அகண்ட பாராயணம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் பாலகாண்ட அகண்ட பாராயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் பல ஆன்மிக நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதில் பாலகாண்ட பாராயணமும் முக்கியத்துவம் வாய்ந்தது. கரோனா 3-ஆவது அலை குழந்தைகளைக் குறி வைக்கும் என்பதால், அதை கட்டுப்படுத்த தேவஸ்தானம் பாலகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்த பாராயணம் நடைபெற்று வருகிறது.

தினசரி நடைபெற்று வரும் இந்த பாராயணம் குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தவுடன் அவற்றை மீண்டும் அகண்ட பாராயணமாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணிவரை பாலகாண்டத்தில் உள்ள 33-ஆவது சா்க்கம் முதல் 37-ஆவது சா்க்கம் வரையில் உள்ள 134 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணமாக நடத்தப்பட்டன.

இதில் வேதபண்டிதா்கள், ஆச்சாரியாா்கள் உள்ளிட்ட 200 பேருக்கும் மேல் பங்கேற்றனா். பாலகாண்ட பாராயணத்தை ஒட்டி மண்டபத்தில் ஸ்ரீசீதா லட்சுமண சமேத ராமசந்திர மூா்த்தி சிலைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகளும், பக்தா்களும் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT