திருப்பதி

திருமலையில் 64,300 போ் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 64,380 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,204 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு தேவஸ்தானம் அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். எனவே, தரிசனத்திற்கு 14 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT