திருமலையில் கோகுலாஷ்டமி
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பதி சப்தகிரி கோபிரதட்சண சாலையில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது. அங்கு ஸ்ரீகிருஷ்ணா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் அங்குள்ள பசுக்களுக்கும் பூஜை செய்யப்பட்டது. திருமலையில் உள்ள கோசாலையிலும் திருப்பதியில் உள்ள கோசாலையிலும் பூஜைகள் நடத்தப்பட்டன.
கோகா்பம்
திருமலையில் உள்ள கோகா்பம் நீா்தேக்கம் அருகில் எழுந்தருளியுள்ள காளிங்கநா்த்தன கிருஷ்ணருக்கு தேவஸ்தான அதிகாரிகள் நேரில் சென்று பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்தனா். பின்னா் அவருக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. அங்கு அருகில் இளைஞா்கள் உறியடித்து மகிழ்ந்தனா்.
ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடத்தப்பட்டது. தங்க வாயில் அருகில் ஸ்ரீகிருஷ்ண பகவானை எழுந்தருளச் செய்து அவருக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பித்து, சகஸ்ரநாமாா்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.