திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரஜினி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.

DIN

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ரஜினியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு புதுப்பொழிவுடன் வெளியிடப்பட்ட பாபா திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு திருமலை திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த ரஜினிக்கு திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கூடிய ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு ரஜினி அழைத்து செல்லப்பட்டார்.

இன்று அதிகாலை தனது மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

ரஜினியின் வருகையால் ரசிகர்கள் கூடியதால், நேற்று இரவு முதல் அதிகாலை வரை திருப்பதி பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT