முகப்பு
திருப்பதி

ஆந்திரத்தில் 10 பேருந்துகள் எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலில் தனியாருக்குச் சொந்தமான 10 பேருந்துகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
ஆந்திரத்தில் தீப்பிடித்து எரிந்த தனியாா் பேருந்துகள்.
பகிர்:

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலில் தனியாருக்குச் சொந்தமான 10 பேருந்துகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

ஓங்கோலில் உள்ள மர டிப்போ அருகே தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்துகள் கரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதில், 10 பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மீதமுள்ள பேருந்துகளை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றனா்.

இந்த தீ விபத்து குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →