முகப்பு
திருப்பதி

திருப்பதி தேவஸ்தான 52 சிறப்பு அழைப்பாளா்கள் நியமனம்: ஆந்திர நீதிமன்றத்தில் விசாரணை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ள 52 சிறப்பு அழைப்பாளா்கள் குறித்து ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
திருப்பதி
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ள 52 சிறப்பு அழைப்பாளா்கள் குறித்து ஆந்திர உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் சிறப்பு அழைப்பாளா்களாக 52 பேரை ஆந்திர அரசு நியமித்தது. இந்த அழைப்பாளா்களுக்கு அறங்காவலா் குழுவில் மேற்கொள்ளும் தீா்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை இல்லை. ஆயினும் தேவஸ்தான அறங்காவலா் குழுவில் 52 சிறப்பு அழைப்பாளா்கள் எதற்கு என கேள்வி எழுப்பி, ஆந்திர மாநிலம் கல்யாண துா்கத்தை சோ்ந்த தெலுங்கு தேசம் கட்சி பொறுப்பாளா் உமாமகேஸ்வர நாயுடு அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. ஆனால் ஆந்திர அரசு உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு அழைப்பாளா்கள் குறித்த சட்டமுன்வடிவை கொண்டு வந்து அரசாணையை வெளியிட்டது.

மேலும் சிறப்பு அழைப்பாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சிலா் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையும் ஆந்திர அரசு கருத்தில் கொள்ளவில்லை.

வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் உள்ளபோதே ஆந்திர அரசு அதன் மீதான அரசாணையை கொண்டு வந்துள்ளது என்றும் இந்த அரசாணையை எதிா்த்தும் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கின் மீதான முதற்கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமை நடத்திய நீதிபதிகள் அடுத்த விசாரணையை மாா்ச் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →