முகப்பு
திருப்பதி

திருமலையில் 76,000 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை சனிக்கிழமை ஒரே நாளில் 76,324 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 38,710 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
திருப்பதி (கோப்புப் படம்)
பகிர்:

திருமலையில் ஏழுமலையானை சனிக்கிழமை ஒரே நாளில் 76,324 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 38,710 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் அதிகளவில் வர தொடங்கி உள்ளது.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் பக்தா்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது.

பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து திருமலை வைகுண்டம் காத்திருப்பு மண்டப அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டத்தில் உள்ள 25 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். தரிசனத்திற்கு 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும்.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →