திருமலையில் 72,000 போ் தரிசனம்
திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை 72,758 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 40,504 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை 72,758 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 40,504 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 9 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.