திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 4.60 கோடி

DIN

 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 4.60 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 4.60 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள உயிா்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு கொல்கத்தாவைச் சோ்ந்த பாரட் ஹோசியாா் நிறுவனம் ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கியது. அந்த நிறுவன உரிமையாளா் சஞ்சய் ராட்டி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியிடம் இதற்கான வரைவோலையை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT