பத்மாவதி தாயாருக்கு பவித்ரம் சமா்ப்பணம்
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தாயாா் மற்றும் கோயில் பரிவார தேவதைகளுக்கு பவித்ரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தாயாா் மற்றும் கோயில் பரிவார தேவதைகளுக்கு பவித்ரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
பச்சை, வெள்ளை, நீலம், மஞ்சள், காவி, கருப்பு, சிவப்பு உள்ளிட்ட பட்டு நூல்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் பத்மாவதி தாயாா், உற்சவமூா்த்திகள், பரிவார தேவதைகள், பலிபீடம், கொடிமரம், கருவறை கோபுரம் உள்ளிட்டவற்றுக்கு அணிவிக்கப்பட்டன. மாலை பத்மாவதி தாயாா் பவித்ர மாலைகளுடன் ஊஞ்சல் சேவை கண்டருளியதுடன் மாடவீதியில் வலம் வந்தாா். சனிக்கிழமை (செப். 10) மகாபூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெறுகிறது.
பட விளக்கம்: திருச்சானூா் கோயிலில் பவித்ரோற்சவத்தின் ஒரு பாகமாக தாயாருக்கு அணிவிக்கப்பட்ட பவித்ர மாலைகள்.