ஏழுமலையான் கோயிலில் 86,700 பக்தா்கள் வழிபாடு
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 86,793 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 30,254 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 86,793 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 30,254 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை நிலவரப்படி பக்தா்கள் திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 20 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது. தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.